அரியலூர்: கிராம வேளாண் வளர்ச்சித் திட்ட உதவிகளை வழங்கினார் கலெக்டர் ரமண சரஸ்வதி

அரியலூர் மாவட்டத்தில் கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

Update: 2022-05-24 11:22 GMT

அரியலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.


தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தை துவக்கி வைத்ததை தொடர்ந்து, அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், அசாவீரன்குடிகாடு கிராமத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம வேளாண் வளர்ச்சித் திட்ட தொடக்க விழாவில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் தாக்கல் செய்த முதல் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை ஒருவாக்கிட அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற மாபெரும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தை துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, செந்துறை ஊராட்சி ஒன்றியம், அசாவீரன்குடிகாடு கிராமத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா நிகழ்வில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் தென்னக்கன்றுகள், உளுந்து, பேட்டரி விசைத்தெளிப்பான்கள், பண்ணை உபகரணங்கள், ஊடுபயிராக பயிரிடும் வகையில் பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள், மாடி காய்கறித்தோட்டம் அமைக்கும் வகையில்ழ 8 வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு, அங்கக இடுபொருட்கள், விவசாயிகளுக்கான கிசான் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை  கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார். மேலும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தை உரிய முறையில் பெற்று பயன்படுத்திக் கொள்வதுடன், அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இத்தி;ட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி, தோட்டக்கலை துணை இயக்குநர் ஆனந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News