லிங்கத்தடிமேடு வள்ளலார் ஆதரவற்றோர் கல்வி நிலையத்தில் குழந்தைகள் தினவிழா

அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, குழந்தைகள் கல்வி குறித்து பேசி, மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்.

Update: 2021-11-15 04:52 GMT

அரியலூர் அருகேயுள்ள லிங்கத்தடிமேடு வள்ளலார் ஆதரவற்றோர் கல்வி நிலையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

அரியலூர் அருகேயுள்ள லிங்கத்தடிமேடு வள்ளலார் ஆதரவற்றோர் கல்வி நிலையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்வி நிலையத் தலைவர் சீனிபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் வி.புகழேந்தி வரவேற்றார். அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா, குழந்தைகள் கல்வி குறித்தும், முன்னுரிமை குறித்தும் பேசி, மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில், நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், மற்றும் குமார், ஆகாஷ், பிரபு உட்பட பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக தலைமை ஆசிரியர் பெ.சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News