அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு வாரவிழா

அரியலூர் மாவட்டம் வாரணவாசி சமத்துவபுரத்தில் மாவட்ட காவல்துறை சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.

Update: 2021-11-09 10:43 GMT

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.

அரியலூர் மாவட்டம் வாரணவாசி சமத்துவபுரத்தில் மாவட்ட காவல்துறை சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வாரணவாசி ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஜயகுமார், திருமேனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், ஷகி ஒருங்கிணைந்த சேவை மைய ஆற்றுபடுத்துனர் சுகன்யா, அரியலூர் குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் ஆகியோர், குழந்தை திருமணம் தவிர்ப்பது, குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்போருக்கு கிடைக்கப்பெறும் தண்டனைகள், பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பது குறித்தும், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து தங்களை மீட்டுக் கொள்ள 181 இலவச எண் குறித்தும் விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News