செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு இயக்கம்: தொடக்கி வைத்த எம்எல்ஏ சின்னப்பா

Latest Chess News - செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா துவக்கி வைத்தார்.

Update: 2022-07-23 06:29 GMT

அரியலூர் பேருந்து நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா துவக்கி வைத்தார்.


Latest Chess News -அரியலூர் மாவட்டம், அரியலூர் பேருந்து நிலையத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா இன்று (23.07.2022) துவக்கி வைத்தார்.

சர்வதேச அளவிலான 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெறவுள்ளது. 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளை அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் பிரபலப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அரியலூர் பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பதாகையில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கையெழுத்திட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு தன் புகைப்படம் எடுக்கும் அமைப்பில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டினார். மேலும், அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரையப்பட்ட செஸ் விளையாட்டு அமைப்பினையும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News