அரியலூர் அரசு பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள்

அரியலூர் மாவட்ட அரசுப் பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு விளம்பர பதாகை வைப்பதை கலெக்டர் துவக்கி வைத்தார்

Update: 2022-07-22 06:12 GMT

அரசுப் பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஒட்டுவில்லை. விளம்பரப் பதாகைகள் அமைக்கும் பணிகளை அரியலூர் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.


சர்வதேச அளவிலான 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெறவுள்ளது. 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளை அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் பிரபலப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பள்ளிகளில் சதுரங்கப் போட்டிகள் நடத்துதல், விழிப்புணர்வு பேரணி, மாரத்தான், இருசக்கர வாகனப் பேரணி உள்ளிட்ட பல்வேறு தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஒட்டுவில்லை மற்றும் பேருந்துகளின் பின்புறம் விளம்பரப் பதாகைகள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார். அரசுப் பேருந்துகளில் - 'நம்ம செஸ் நம்ம பெருமை, இது நம்ம சென்னை நம்ம செஸ்' போன்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கண்ணை கவரும் வகையிலான ஒட்டுவில்லைகள் மற்றும் விளம்பரப் பதாகைகள் அரசுப் பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ளது.

பயணிகள் மற்றும் பொதுமக்கள் செஸ் ஒலிம்பியாட் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் அரியலூர் பேருந்து நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு தன் புகைப்படம் எடுப்பதற்கான அமைப்பினையும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

பின்னர், அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில் நடைபெற்ற தனியார் பள்ளிகளுக்கிடையேயான செஸ் போட்டிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்து, பார்வையிட்டார். தனியார் பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டிகளில் 13 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 25 மாணவர்கள், 26 மாணவிகள் என மொத்தம் 51 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். சதுரங்கப் போட்டியில் கலந்துகொண்டுள்ள மாணவ, மாணவிகள் சிறப்பாக விளையாடி சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட மேலாளர் (அரசுப்போக்குவரத்துக் கழகம்) ராமநாத், கிளை மேலாளர் குணசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News