செட்டிநாடு சிமெண்ட் ஆலை முற்றுகை

கீழப்பழுவூரில் செட்டிநாடு தனியார் சிமெண்ட் ஆலையை ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம்.

Update: 2021-07-07 11:56 GMT

செட்டிநாடு சிமெண்ட் ஆலை முற்றுகை

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் செட்டிநாடு தனியார் சிமெண்ட் ஆலையை ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி தலைமையில் வார்டு உறுப்பினர்கள் 9 பேர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்றின்‌ காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கீழப்பழுவூர் கிராம மக்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தொற்றினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த நிலையில், அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரணங்களை வழங்க ஊராட்சி மன்றத்தின் சார்பில், பலமுறை கோரிக்கை விடுத்தும் அந்த கோரிக்கைக்கு செவிசாய்க்காத ஆலை நிர்வாகத்தை கண்டித்து ஆலையை முற்றுகையிட்டனர். தங்கள் ஊரில் ஆலையை வைத்து சிமெண்ட் உற்பத்தி செய்து வருமானம் ஈட்டும் சூழ்நிலையில், கொரோனா காலத்தில் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் பாதித்த நிலையில், அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை வழங்காததால் அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News