அரியலூர்-காவல்துறை நண்பர்களின் வாரிசுகளுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் பயிற்சி

அரிலூர் மாவட்டத்தில் காவல் துறை நண்பர்களின் வாரிசுகளுக்கு தொழில் நெறி வழிகாட்டும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

Update: 2021-09-15 06:00 GMT

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை நண்பர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பெரோஸ் கான்அப்துல்லா மேற்பார்வையில் நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மைய துணை இயக்குனர் ஜெ.. மகாராணி சிறப்புரை ஆற்றினார். ராணுவ வேலை வாய்ப்பு என்ற தலைப்பில் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் துணை இயக்குனர் லெப். கமாண்டர் சங்கீதா கலந்து கொண்டு போட்டித் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து ஆண்டிமடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர் ஜான் பாஷா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் குறித்தும் பேசினார்கள்.

அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மைய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வினோத்குமார், தொழில் தொடங்குவது குறித்து அரியலூர் மாவட்ட தொழில் மைய ஜூனியர் இன்ஜினியர் ஜனனி, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு தேடுபவர்கள் கலந்து கொண்டு, பணியில் சேருவதற்கான பயிற்சி குறித்து விழிப்புணர்வு அடைந்தனர்.

Tags:    

Similar News