அரியலூர் மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் தொடங்கி வைப்பு

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா (பூஸ்டர்) தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை முகாம் பணியினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

Update: 2022-01-10 10:10 GMT

அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.


அரியலூர் மாவட்டத்தில் கொரோனா (பூஸ்டர்) தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை முகாம்  தொடங்கி வைக்கப்பட்டது.

செந்துறை அடுத்த இரும்புலிக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில், சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர் மற்றும் 60-வயதுக்குமேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தும் பணியினை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 18 கட்டங்களாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் முதல் தவணை தடுப்பூசி 6,43,167 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 4,41,447 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர் மற்றும் 60-வயதுக்குமேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் அமர்நாத், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, வட்டாட்சியர் குமரையா, வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News