அரியலூர் தமிழ்க்களம் சார்பில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரியலூர் செந்துறை சாலையில் தமிழக் களம் சார்பில் புத்தகக் கண்காட்சி

Update: 2021-12-29 13:38 GMT

அரியலூரில் தமிழ்க் களம் சார்பில் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து, முதல் விற்பனையை சொல்லாய்வு அறிஞர் ம.சோ.விக்டர் தொடங்கி வைத்தார்.



புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரியலூர் செந்துறை சாலையில் தமிழ்க் களம் சார்பில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

கண்காட்சியை சொல்லாய்வு அறிஞர் ம.சோ.விக்டர் திறந்து வைத்து, முதல் விற்பனை தொடக்கி வைத்தார்.

கண்காட்சியில், திருக்குறள், பாரதியார் கவிதைகள், சங்ககால இலக்கியம், வரலாறு, தொல்காப்பியம், சிந்து சமவெளி நாகரிகம், வால்காவிலிருந்து கங்கரை வரை, தமிழ் அகராதி, பாரதிதாசனின் குடும்ப விளக்கு உள்ளிட்ட தலைப்புகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் அனைத்து விதமான புத்தகங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், டி.என்.பி.எஸ்.சி, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான ஏராளமான புத்தகங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ஜனவரி 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில், 10 சதவீதம் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சமூக செயற்பாட்டாளர் இளவரசன் செய்து வருகிறார்.

Tags:    

Similar News