அரியலூரில் பாதுகாப்பான சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு பேரணி

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாதுகாப்பான சாலைப் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2022-09-26 12:37 GMT

அரியலூரில் பாதுகாப்பான சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவு படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக "பாதுகாப்பான சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி" அண்ணா சிலையில் இருந்து தொடங்கி மாதா கோவில் சந்திப்பு வரை சென்று நிறைவு பெற்றது. இதில் சுமார் 200 ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியை அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். 200 வாகன ஓட்டுனர்களுக்கு விபத்தில்லா சாலை பயணம் மற்றும் மதுபோதையினால் ஏற்படும் விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் அரங்கில்  நடைப்பெற்றது. இதில் அரியலூர் காவல் ஆய்வாளர் கோபிநாத் மற்றும் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News