காவல் உதவி செயலி குறித்து பொதுமக்கள், மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பேருந்து நிலையத்தில் முகாம் அமைத்து“காவல் உதவி செயலி” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-07-09 11:41 GMT

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் "காவல் உதவி செயலி" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட காட்சி.

திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் சரவண சுந்தர் உத்தரவுப்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் பேருந்து நிலையத்தில் அரியலூர் போக்குவரத்து காவல்துறை மற்றும் அரியலூர் நகர காவல் துறை சார்பாக"காவல் உதவி செயலி" பதிவிறக்கம் மற்றும் அதன் அவசியம் குறித்து முகாம் அமைத்து பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், அரியலூர் நகர காவல் ஆய்வாளர் கோபிநாத், காவலர்கள் ஆகியோருடன் 'SPISE', மற்றும் 'சொலைவனம்' தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டு 'காவல் உதவி ' செயலியை பொதுமக்களுக்கு பதிவிறக்கம் செய்ய உதவி செயதனர்.

இந்த முகாமில் 'காவல் உதவி' செயலியின் அவசியம் மற்றும் உபயோகம் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் விளக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த செயலியை தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு காவல்துறைக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

Tags:    

Similar News