போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவ மாணவிகளுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Update: 2022-06-28 12:24 GMT

அஸ்தினாபுரம் அரசு மாதிரி உயர் நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகரன் தலைமையில், (இணைய குற்றப்பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக அஸ்தினாபுரம் அரசு மாதிரி உயர் நிலைப் பள்ளியில் போதைப்பொருள் உபயோகிப்பதால் உண்டாகும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தும், ஸ்டிக்கர்ஸ் ஒட்டியும், துண்டுபிரசுரங்கள் வழங்கியும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் அனைவரும் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட மது அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News