மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு போட்டிகள்

http://ariyalur.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது படைப்புகளை பதிவேற்றம் செய்யலாம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

Update: 2022-02-08 06:18 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி.

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

மது அருந்துவதாலும் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலும் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரியலூர் மாவட்ட பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் விதமாக, இணையவழி மூலம் மதுவினால் ஏற்படும் தீமைகள், சமூக கொண்டாட்டங்களும், மது ஏற்படுத்தும் விளைவுகளும் என்ற தலைப்பின் கீழ் ஓவியப்போட்டிகள், கவிதைப்போட்டிகள், விழிப்புணர்வு வாசக (ஸ்லோகன்) போட்டிகள் மற்றும் குறும்படங்கள் தயாரித்தல் ஆகிய போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் http://ariyalur.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது படைப்புகளை 26.01.2022 முதல் 15.02.2022 முடிய பதிவேற்றம் செய்யலாம்.

மேற்படி போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் பரிசுகள் வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தால் 22.01.2022 அன்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேற்படி போட்டிகளின் காலக்கெடு 15.02.2022 உடன் முடிவடைவதால் மேற்படி இணைய வழிபோட்டிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News