விருது: மாற்றுத்திறனாளிகளுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் விருதுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அரியலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-10-27 05:18 GMT

சிறப்பாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் மாநில விருதுகள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினமான வரும் டிசம்பர் மாதம் 03 ல் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று மாற்றுத்திறனாளிகளுக்காக சிறந்த பணியாளர், சுயதொழில் புரியும் கை,கால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் குணமடைந்தோர், பார்வைதிறன் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடுடையோர், அறிவுசார்குறைபாடுடையோர், புறவுலக சிந்தனையற்றோர் குறிப்பிட்ட கற்றலில் குறைபாடுடையோர், மனநோய், இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு, இரத்த அழிவுச்சோகை, அரிவாளணு இரத்தச் சோகை, நாள் பட்ட நரம்பியல் பாதிப்பு (திசு பண்முக கடினமாதல்), நடுக்கு வாதம், பல்வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கான தமிழக அரசு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் பார்வையற்றோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர், செவித்திறன் பாதிக்கப்ட்டோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர், அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர், சிறந்த சமூக பணியாளர் மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் செவித்திறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர், ஆரம்ப நிலைபயிற்சி மையங்களில் பணியாற்றும் அறிவுசார் குறைபாடுடையோருக்கும் கற்பிக்கும் சிறந்த ஆசிரியர், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம், மாற்றுத்திறனனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான விருதுகள் வழங்கப்படுகிறது.

எனவே மேற்கண்ட விருதுக்கு தகுதியான நபர்கள் அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, 28.10.2021க்குள் விண்ணப்பிக்குமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தள்ளார்.

Tags:    

Similar News