ஜெயங்கொண்டத்தில் ஏஐடியுசி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Ariyalur News Today -52 மாதங்களுக்குரிய தினக்கூலி ஊதியத்திற்காக நிலுவைத் தொகையை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும்.

Update: 2022-06-22 03:30 GMT

ஜெயங்கொண்டத்தில் ஏஐடியுசி சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

Ariyalur News Today - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க செயலாளர் தம்பிசிவம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்ற உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் நிரந்தர தொழிலாளர்கள் பணிக்கு சேர்ந்த காலத்திலிருந்து திருத்தம் செய்யப்பட்டுள்ள புதிய பங்களிப்பு ஓய்வூதியத் தொகை கணக்கு வருடவாரியாக வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்ட 2017இல் இருந்து 2021 ஜூலை வரையிலான 52 மாதங்களுக்குரிய தினக்கூலி ஊதியத்திற்காக நிலுவைத் தொகையை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும்.

கொக்கி, மண்வெட்டி, அன்னக்கொடி, மிலாறு என பணிக்கான தளவாட கருவிகள் பாதுகாப்பு சாதனங்கள் கொடுக்காமல் தொழிலாளர்களை கசக்கிப் பிழிவது, சாதியைச் சொல்லி இழிவாகப் பேசுவதும், தொழிற்சங்க நிர்வாகிகளை ஊர்மாற்றம் செய்வோம் என மிரட்டுவது போன்ற அடாவடி போக்கினை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் வார விடுமுறைக்கு சம்பளத்தை பிடிக்கும் போக்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News