அரியலூர்: விளந்தை அழகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

விளந்தை அழகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-06-17 09:05 GMT

ஆண்டிமடம் அருகே பிரசித்தி பெற்ற விளந்தை அழகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் அகஸ்திய மாமுனிவரால் பூஜிக்கப்பட்டு பஞ்சலிங்கம் பிரதிஷ்டை செய்த திவ்ய ஸ்தலமாக விளங்கக்கூடிய விளந்தை கிராமத்தில் அழகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.



கடந்த 31ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கிய, இவ்விழாவானது பல்வேறு யாகசாலை சிறப்பு பூஜைகள் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்று, ராஜ கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றினர்.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கர கோசங்களை எழுப்பினர். முன்னதாக விநாயகர் மற்றும் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இவ்விழாவில், சூரியனார் கோவில் ஆதீனம் இருபத்தி எட்டாவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் மற்றும் மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில் தலைமை குருக்கள் பாலச்சந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

ஆண்டிமடம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்த்தை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News