விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசின் விருதுகள்: விண்ணப்பிக்க கலெக்டர் ரத்னா அழைப்பு

விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-11 09:36 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா (பைல் படம்)

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, விளையாட்டுத் துறையில் நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டில் தொடர்புடையவர்களுக்கு (Sports Administrators) பல்வேறு விருதுகளை இந்திய அரசு ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.

2021 ஆம் ஆண்டிற்கான அர்ஜீனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, ராஸ்ட்ரியா கேல் ப்ரோட்சஹான் புரஸ்கார் விருது, துரோணாச்சாரியா விருது மற்றும் தயான் சந்த் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அர்ஜீனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, ராஸ்ட்ரியா கேல் ப்ரோட்சஹான் புரஸ்கார் விருது, துரோணாச்சாரியா விருது மற்றும் தயான் சந்த் விருது பெற இளம் வயதில் சாதனை புரிந்தவர்கள், விளையாட்டுக்களை ஊக்குவிப்பதுடன் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியவர்கள், விளையாட்டு கட்டமைப்பில் விளையாட்டுப் போட்டிகளை தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் நடத்தியவர்களுக்கு வழங்கப்படும்.

துரோணாச்சாரியா விருது இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும், வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்கிய பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும்.

தயான்சந்த் விருது தலைசிறந்த விளையாட்டு வீரராகவும், தலைமைபண்புமிக்கவராகவும், விளையாட்டிற்கொன தன்னை அர்பணிப்பவராகவும், சிறந்த ஒழுக்கமுடையவராகவும், இருப்பவர்களுக்கு வழங்கப்படும்.

இவ்விருதுகளுக்கான விண்ணப்பபடிவம் மற்றும் இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பமாட்டு ஆணைய இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அர்ஜீனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, ராஸ்ட்ரியா கேல் ப்ரோட்சஹான் புரஸ்கார்விருது, துரோணாச்சாரியா விருது தாயான் சந்த் விருது விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் சம்பந்தப்பட்ட விருதிற்கான விண்ணப்பங்கள் என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அரியலூர் அவர்களை 7401703499 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

எனவே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.06.2021 ஆம் தேதிக்குள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நான்கு நகல்களுடன் சமர்பிக்க வேண்டும் இவ்வாறு  மாவட்ட கலெக்டர் த.ரத்னா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News