அரியலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 78.68 % வாக்குப்பதிவு

இறுதி வாக்குப்பதிவு நிலவரப்படி 4321ஆண் வாக்காளர்களும், 4595பெண் வாக்காளர்களும் சேர்த்து 8916 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

Update: 2021-10-09 14:56 GMT

அரியலூர் மாவட்டத்தில் 3 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 13 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆக மொத்தம் 16 பதவியிடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் செந்துறை ஒன்றியம் – கீழமாளிகை, ஜெயங்கொண்டம் ஒன்றியம் - உட்கோட்டை, ஆண்டிமடம் ஒன்றியம் - அழகாபுரம் மற்றும் நாகம்பந்தல் ஆகிய 4 வார்டு உறுப்பினர் பதிவி இடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்டத்தில் எஞ்சியுள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய ஒன்றியங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலையில் நிறைவு பெற்றது. இன்று நடைபெற்ற தேர்தலில் 5669 ஆண் வாக்காளர்களும், 5663 பெண் வாக்காளர்களும் சேர்த்து 16,332 வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர். இறுதி வாக்குப்பதிவு நிலவரப்படி 4321 ஆண் வாக்காளர்களும், 4595 பெண் வாக்காளர்களும் சேர்த்து 8916 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

அரியலூர் ஒன்றியத்தில் 79.08 % வாக்குகளும், திருமானூர் ஒன்றியத்தில் 85.43 % வாக்குகளும், செந்துறை ஒன்றியத்தில் 67.30 % வாக்குகளும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 83.31 % வாக்குகளும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 77.30% வாக்குகளும், தா.பழூர் ஒன்றியத்தில் 79.96% வாக்குகளும் சேர்த்து, மாவட்டம் முழுவதும் 78.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. பதிவான வாக்குப்பெட்டிகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லும் பணியில் தேர்தல் அலுவலர்களும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News