அரியலூரில் போலீசாருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் எஸ்பி பாஸ்கரன் வழங்கல்

அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் எஸ்பி பாஸ்கரன் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

Update: 2021-05-29 10:25 GMT

அரியலூர் மாவட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாஸ்கரன் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

அரியலூர் மாவட்டத்தில் மக்கள் பாதுகாப்பு பணியில் உள்ள 1000த்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை பரவும் பெருந்தொற்று காலத்தில் காவல்துறையினரின் நலனில் அக்கறை கொண்டு அரியலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 16 காவல் நிலையத்திற்கும், 2 அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், 2 போக்குவரத்து காவல் நிலையத்திற்கும் , காவல்துறையில் உள்ள அனைத்து பிரிவிற்கும் வழங்கினர்.

   N95 முகக்கவசம் ,கை உரை ,சர்ஜிகல் முகக்கவசம் ,பிபிஇ கிட்(PPE KIT),மினி சானிடைசர், சோப் மற்றும் சோப் ஆயில் அடங்கிய கொரோனா தொற்று பரவல் தடுப்பு உபகரணங்களை அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாஸ்கரன் வழங்கினார்.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் காவல்துறையினருக்கு ஜிங்க் மற்றும் விட்டமின் மாத்திரை அட்டைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின்போது அரியலூர் மாவட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ரவி மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தார்கள்.

Tags:    

Similar News