அரியலூர்: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை அரியலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார்.

Update: 2022-06-24 08:56 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்  கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கீழ்கண்ட பதவியிடங்களுக்கு நடைபெற உள்ளது.

அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடத்திற்கு தற்செயல் தேர்தல் நடைபெறவுள்ளது. திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி (வார்டு-6) உறுப்பினர், செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் நாகல்குழி ஊராட்சி (வார்டு-1) உறுப்பினர் மற்றும் துளார் ஊராட்சி (வார்டு-6) உறுப்பினர், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் கழுவந்தோண்டி ஊராட்சி (வார்டு-6) உறுப்பினர் மற்றும் மேலணிக்குழி ஊராட்சி (வார்டு-7) உறுப்பினர், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் இடையக்குறிச்சி (வார்டு-7) உறுப்பினர் மற்றும் சிலம்பூர் ஊராட்சி (வார்டு-1) உறுப்பினர், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தம்பாடி ஊராட்சி (வார்டு-7) உறுப்பினர் மற்றும் தென்கச்சிபெருமாள் நத்தம் (வார்டு-4) உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே, அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை (Control Room) 04329- 228902 எனும் தொலைபேசி எண்ணுடன் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News