அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார் அரியலூர் எம்.எல்.ஏ.

அரியலூர் எம்.எல்.ஏ. கு.சின்னப்பா 155 மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினார்.

Update: 2022-09-19 10:14 GMT

மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார் அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் எம்.எல்.ஏ. கு.சின்னப்பா விழாவில் கலந்துகொண்டு 155 மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்கிய சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார். திருமானூர் ஒன்றிய பெருந்தலைவர் அசோக் சக்கரவர்த்தி, மாவட்ட கவுன்சிலர் கீதா ஜெயவேல், ஏலாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் மீனாம்பிகா சிவானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் சங்கு, மதிமுக ஒன்றிய செயலாளர் பி.சங்கர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News