பேரறிவாளன் விடுதலையை அரியலூர் வக்கீல்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அரியலூர் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் பேரறிவாளன் விடுதலைக்காக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2022-05-18 10:18 GMT

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அரியலூர் வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

உச்சநீதிமன்றம் இன்று  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அடைந்த பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து அரியலூர் நீதிமன்ற வளாகம் முன்பு கூடிய வழக்கறிஞர்கள், பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். நிகழ்வில் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் மனோகரன், சங்க செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் கொளஞ்சிநாதன், இணைச்செயலாளர் முத்துக்குமரன், மற்றும் வழக்கறிஞர்கள் செல்வமணி, ஹரிபாஸ்கர், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.பேரறிவாளன் விடுதலை தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News