அரியலூரில் ஆர்டிசி குழுமம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கல்

அரியலூரில் ஆர்டிசி குழுமம் அரசு மருத்துவமனைக்காக 3 ஆக்சிஜன் செறியூட்டும் கருவியை கலெக்டர் ரத்னாவிடம் வழங்கியது.

Update: 2021-06-03 04:16 GMT

அரியலூர் அரசு மருத்துவமனைக்காக ஆர்டிசி குழுமம் 3  ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை கலெக்டர் ரத்னாவிடம் வழங்கியது.

ஆர்.டி.சி குழுமங்களின் சார்பில் அக்பர் ஷெரிப் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தலா ரூ.1 இலட்சத்து 18 ஆயிரம் என 3 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள் ரூ.3 இலட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் மாவட்ட கலெக்டர் த.ரத்னாவிடம் வழங்கினார்.

இக்கருவி மூலம் ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நபர்களின் சிகிச்சைக்காக சிலிண்டர் இல்லாமல் காற்றிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து, நோயாளிகளுக்கு வழங்க முடியும் என்பது குறிப்பிடதக்கது. 

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் பிற உதவி தேவைப்படும் நபர்களின் வசதிகளுக்காக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் இதுபோன்ற தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும் எனவும்,

இந்த ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளை வழங்கிய அமைப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்தார்.


ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரியின் முதல்வர் (பொ) முனைவர்.ம.இராசமூர்த்தி ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை தமிழக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு மாவட்ட கலெக்டர் த.ரத்னாவிடம் வழங்கினார்.

இக்கொரோனா பேரிடர் காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய முனைவர் ம.இராசமூர்த்திக்கு மாவட்ட கலெக்டர் சால்வை அணிவித்து பாராட்டினார்.


Tags:    

Similar News