அரியலூர் மாவட்ட கலெக்டர் ஒருசார்பாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு

தான் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றாக மதித்து நடப்பாக அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பதிலடி.

Update: 2022-08-08 09:22 GMT

மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட சோழன்குடிகாடு கிராமத்தில் காலணித்தெருவில் ஆண்டுதோறும் அம்மன் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு திருவிழா நேற்று நடைபெற்றபோது அம்மன் படம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் படம் போட்ட பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அப்போது மாற்றுச்சமூகத்தை சேர்ந்த சிலர் தரக்குறைவாக பேசியதோடு, சிலரை தாக்கிதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை அக்கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் சென்ற மாணவர்களை மீண்டும் அக்குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து சோழன்குடிகாடு காலணித்தெருவில் வசிக்கும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருப்பாளர்கள் பலர் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனுஅளிக்க வந்துள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து சிலர் மட்டும் சென்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க கூறியுள்ளனர்.

இதனை ஏற்றுக்கொள்ளதாக அம்மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று ஆய்வு மேற்கொண்டிருந்த மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, வாசலில் சோழன்குடிகாடு கிராம பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதை கேள்விபட்டு அதிகாரிகளை அனுப்பி அவர்களை உள்ளே வருமாறு கூறியனுப்பியுள்ளார்.

ஆனால் அனைவரையும் உள்ளே அனுமதித்தால்தான் உள்ளே வருவோம் என்றுகூறி பொதுமக்கள் தொடர் மறியலில் ஈடுபட்டனர். மதியம் 1.30மணிக்கு குறைதீர் கூட்டத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற மாவட்ட கலெக்டர் ரமணசஸ்வதியின் காரை மறித்து வாசலில் பொதுமக்கள் அமர்த்திருந்ததால் கீழே இறங்கி பொதுமக்களை மாவட்ட கலெக்டர் சந்தித்தார்.

அப்போது மாவட்ட கலெக்டரிடம் முறையிடாமல் தொடர்ந்து கூச்சலிட்டுள்ளனர். இதனைடுத்து அவர்களை சமானதப்படுத்திய மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி மாணவிகளிடம் என்ன நடத்தது என்று கேட்டறிந்தார். இந்நிலையில் மாவட்ட கலெக்டரிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருப்பாளர் அன்பானந்தம், மாவட்ட கலெக்டர் ஒருசார்பாக நடத்து கொள்வதாகவும், கடந்த வாரம் மனுகொடுக்க வந்த ஆனந்தவாடி கிரமமக்களிடம் அலட்சிய போக்கோடு பதில் அளித்துள்ளதால் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும், சிதம்பரம் நாடளுமன்ற தொகுதி மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டினார். இத்திடீர் குற்றச்சாட்டால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காவல்துறையினர் நேற்றை சம்பவத்திலும், அரியலூர் மாவட்டத்தின் பல சம்பவங்களிலும் ஒருசார்பு நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து அவர்களிடம் பேசிய மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தான் பொதுமக்கள் அனைவரையும் சந்தித்து மனுக்களை பொற்று வருவதாகவும், அனைத்து சமூகத்தினரையும் ஒன்றாக மதித்து தான் நடப்பாகவும் கூறினார். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் கடைமைகளை தான் சரிவர நிறைவேற்றி வருவதாகவும், முறையாக மனுக்களை அளித்தால் உரிய விசாரனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வேன் என்று கூறினார்.

இதனையடுத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டதோடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனையடுத்து பொதுமக்கள் மறியலை விலக்கிகொள்ள காரில் தனது வீட்டிற்கு மாவட்ட கலெக்டர் சென்றார்.

மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் மாவட்ட கலெக்டர் ஒருசார்பாக நடந்துகொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம்சாட்டி போசியதோடு, தங்களது கட்சித்தலைவர் மாவட்ட கலெக்டர்மீது அதிருப்தியில் இருப்பாத பொதுவெளியில் விமர்சித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News