அரியலூரில் கொரோனா தடுப்பூசி பணிகள் மீண்டும் தொடக்கம்

அரியலூரில் கொரோனா தடுப்பூசி பணிகள் மீண்டும் தொடங்கியது.

Update: 2021-06-12 06:58 GMT

பைல் படம்

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இன்னிலையில் இன்றுமுதல் கொரோனா நோய்த் தடுப்புஊசி போடும் பணிகள். மீண்டும் தொடங்கியது.

இதன்படி கடுகூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 600, திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 700, குழுமியம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 600, தா.பலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 600, ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 700, மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 800, அரியலூர் அரசு மருத்துவமனை 200, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை 200, உடையார்பாளையம் அரசு மருத்துவமனை 100, செந்துரை அரசு மருத்துவமனை 100, அரியலூர் நகரப்பகுதி மருத்துவமனை 200, என மொத்தம் 4800 கொரோனா தடுப்புஊசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் பொதுமக்களுக்கு 18வயதிற்கு மேற்பட்டு 44வயதிற்கு உட்பட்டோருக்கு கொரோனா நோய் தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News