அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் மத நல்லிணக்க நாள் உறுதி ஏற்பு

அரியலூர் மாவட்டத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் எடுக்கப்பட்டது.

Update: 2022-08-19 06:39 GMT

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நல்லிணக்க நாள் உறுதிமொழி மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் எடுக்கப்பட்டது.


முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20-ம் தேதி மத நல்லிணக்க தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி, நல்லிணக்க நாள் உறுதிமொழியான, "நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்து கொள்கிறோன். மேலும், எங்களிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலைமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக்கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்" என்று மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வாசிக்க அதனைத்தொடர்ந்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் பின் தொடர்ந்து கூறி நல்லிணக்க நாள் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News