அரியலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருத்தினை வழங்க முதல்வருக்கு வேண்டுகோள்

அரியலூர் நகரில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தந்தைக்கு கருப்பு பூஞ்சைக்கான மருந்தை வழங்ககோரி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2021-05-28 04:18 GMT

அரியலூரில் கருப்புபூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மருந்தினை வழங்குமாறு தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.அரியலூர் நகரில் வசிக்கும் எல்ஜசி ஏஜென்ட் செல்வராஜ் எனபவர் கடந்த வாரம் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பரிசோதனையில் செல்வராஜ்க்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அரியலூரில் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதியில்லாததால் செல்வராஜ் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

அம்மருத்துவமனையில் செல்வராஜ்க்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், கருப்பு பூஞ்சைக்கான ஆம்போடெரிசின் பி மருந்தினை தொடர்ந்து செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் இம்மருந்துகள் வெளிமருந்து கடைகள் எங்கும் கிடைக்காததால் செல்வராஜ் குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இம்மருந்து அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதையடுத்து தங்களுக்கு இம்மருந்தை பெற்றுத்தருமாறு அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் செல்வராஜ் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.

மேலும் தமிழக முதல்வர் உடனடியாக கருப்பு பூஞ்சை நோயிற்கான ஆம்போடெரிசின் பி மருந்தினை வழங்கி தனது தந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என ஊடகத்தின் வாயிலாக செல்வராஜ் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்

Tags:    

Similar News