அரியலூரில் 971 பேருக்கு தாலிக்கு தங்கம் : அமைச்சர் சிவசங்கர் வழங்கல்

அரியலூரில் 971 பேருக்கு, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் தங்க நாணயங்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

Update: 2021-06-15 09:51 GMT

அரியலூரில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில்  971 பேருக்கு தங்கநாணயம் அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

971 ஏழை பெண்களுக்கு ரூ.7 கோடியே 41 இலட்சத்து 59 ஆயிரத்து 380 மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்க நாணயங்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

தமிழக அரசு பெண்களின் வாழ்க்கைதரம் முன்னேறத்திற்காகவும், பெண் கல்வியினை ஊக்கப்படுத்திடவும் எண்ணற்ற பெண்கள் சார்ந்த நலத்திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அதில், பெண் கல்வி ஊக்கப்படுத்திடவும். ஏழ்மையின் காரணமாக பெண்களின் திருமணம் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காவும் தமிழக அரசு ஏழைபெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25,000 நிதியுதவியும், 8 கிராம் தாலிக்கு தங்கமும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் 8 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்கி வருகிறது.

அரியலூர் அன்னலெட்சுமி ராஜபாண்டிய திருமண மண்டபத்தில், மாவட்ட சமூக நலம் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா முன்னிலை வகித்தார். 971 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் நாணயங்களை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த 443 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 10 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவியும், பட்டப்படிப்பு முடித்த 528 ஏழை பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 கோடியே 64 இலட்சம் மதிப்பிலான நிதியுதவியும் என ஆகமொத்தம் 971 ஏழை பெண்களுக்கு ரூ.3 கோடியே 74 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவியும், ரூ.3 கோடியே 66 இலட்சத்து 84 ஆயிரத்து 380 மதிப்பில் தலா 8 கிராம் வீதம் 7768 கிராம் தாலிக்கு தங்கமும் சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்பபட்டது.

அதனைத்தொடர்ந்து, ஆதரவற்றோர், வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர், கணவனால் கைவிடப்பட்டோர், விதவை பெண்கள் என 48 நபர்களுக்கு சமூக நலத்துறையின் சார்பில் ரூ.2 இலட்சத்து 34 ஆயிரத்து 240 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

இவ்விழாவில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா , ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சொ.க.கண்ணன் , மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், வருவாய் கோட்டாட்சியர் ஏழுமலை, மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, வட்லீடட்சியர் ராஜமூர்த்தி, ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்செல்வி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத்தலைவர் அபிநயா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News