அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 48 பெண்களுக்கு பணி நியமன ஆணை

அரியலூர் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாமில், தேர்வு செய்யப்பட்ட 48 பெண்களுக்கு பணிநியமன ஆணையினை ஆட்சியர் வழங்கினார்.

Update: 2021-12-16 02:09 GMT

அரியலூரில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான பெண்களுக்கு பணி நியமன ஆணையை ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.


அரியலூரில் நடைபெற்ற பெண்களுக்கான தனியார் (டாடா) வேலை வாய்ப்பு முகாமில், தேர்வு செய்யப்பட்ட 48 பெண்களுக்கு பணிநியமன ஆணையினை ஆட்சியர் வழங்கினார்.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மைய வளாகத்தில் நடைபெற்ற இந்த பெண்களுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 612 பெண் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர்.

3 கட்டங்களாக நடைபெற்ற இந்த நேர்காணலில் 48 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வழங்கி, பாராட்டினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எஸ்.ஜி.ரமேஷ், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மூ.வினோத்குமார், டாடா நிறுவன மனிதவள மேலாளர் ஆன்ட்ரோ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News