சட்டபூர்வ பாதுகாவலர் நியமனப் பணிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் தேசிய அறக்கட்டளையால் வழங்கப்படும் சட்டபூர்வ பாதுகாவலர் நியமனப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-10-13 05:54 GMT

அரியலூர் மாவட்டத்தில் தேசிய அறக்கட்டளையால் வழங்கப்படும் சட்டபூர்வ பாதுகாவலர் நியமனப் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.


மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய அறக்கட்டளை மனவளர்ச்சி குன்றியோர், மூளை முடக்குவாதம், ஆட்டிசம் மற்றும் பல்வகை மாற்றுத்திறன் கொண்டோருக்கு சட்டபூர்வ பாதுகாவலர் நியமனம் உள்ளுர் பாதுகாப்பு குழுமம் மூலம் வழங்கி வருகிறது.

இதனடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வரும் உள்ளுர் பாதுகாப்பு குழும கூட்டம் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டபூர்வ பாதுகாவலர் நியமனத்திற்கான ஆய்வு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.சீனிவாசன் முன்னிலை வகித்தார், உள்ளுர் பாதுகாப்பு குழுமம் உறுப்பினர் குமுதம், குளோபல் அறக்கட்டளை, கடலூர் வரவேற்று பேசினார்.

இதில் உள்ளுர் குழுமம் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர் அன்பழகன் நன்றியுரை கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்களால் செய்யப்பட்டது.

Tags:    

Similar News