இருசக்கரவாகன வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம்

அரியலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு.

Update: 2022-05-17 09:56 GMT

கைது செய்யப்பட மணிகண்டன் மற்றும் பாலமுருகன்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெருமாத்தூர், இலையூர் பகுதிகளில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் இருசக்கர வாகன திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட மணிகண்டன் (37) S/o சுப்பிரமணியன், நடுத்தெரு, சாத்தன்பட்டு மற்றும் முசை என்கிற பாலமுருகன் (39/22) கலியபெருமாள், வடக்குத்தெரு, மேலூர் ஆகிய இருவரையும் ஜெயங்கொண்டம் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்கள் வெளியே வந்தால் மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபடக் கூடும் , மற்றும் மக்களின் உயிர் மற்றும் உடமைகள் ஆட்சித் ஏற்படுத்தக்கூடும் என்பதால் குற்றவாளிகள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம், ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்திரவன் அவர்கள் பரிந்துரை செய்தனர்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா மேற்பரிந்துரையை ஏற்ற அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழக்கின் குற்றவாளிகள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி ஓராண்டு வெளியே வராதபடி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணை பிரதிகளை காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News