அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் உதவ எண்கள் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்களுக்காக உதவ பாதுகாப்பு சம்பந்தமான அரசின் உதவி எண்களை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-04-24 07:37 GMT

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொதுமக்கள் தங்களின் பாதுகாப்புக்காக அரசின் சார்பில் உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குழந்தைகளுக்கான குற்றச்செயல் தடுப்பு மற்றும் உதவிகள் கூறுவதற்காக 1098 என்ற எண்ணும், மகளிர்க்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக 181 என்ற எண்ணும், காவல் துறை சம்பந்தமான உதவிகளைப் பெறுவதற்காக 100 என்ற எண்ணும், முதியோருக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 14567 என்ற எண்ணும், இணையவழி குற்றங்களுக்காக தகவல்கள் தெரிவித்து நிவாரணம் பெறுவதற்காக 1930 என்ற எண்ணும் பொதுமக்களின் உபயோகத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட எண்ணில் அனைத்து நாட்களிலும் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு பொது மக்கள் உதவிகளைப் பெறலாம் என்று அரியலூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

Tags:    

Similar News