அன்னிமங்கலம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

அன்னிமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-04-06 13:45 GMT

அன்னிமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் அன்னிமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருமானூர் அடுத்த அன்னிமங்கலம் கிராமத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஆறுபடை முருகன், மாரியம்மன், காளியம்மன் மற்றும் ஞானாம்பிகை உடனாய தியானலிங்கேஸ்வரர் கோயில்களின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், கடந்த 4-ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்யாஹவாசனம் உள்ளிட்ட பூஜைகளும், தொடர்ந்து 4 கால பூஜைகளும் நடைபெற்று, நேற்று காலை 9 மணிக்கு மேல், யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து, மேற்கண்ட கோயில்களில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News