அரியலூரில் தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூரில் முன்னாள் அரசுகொறடா தாமரை.ராஜேந்திரன் வீட்டு முன்பு கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2021-07-28 05:56 GMT

திமுகவுக்கு எதிராக அரியலூரில் நடந்த ஆர்ப்பாட்டம்

அரியலூரில் முன்னாள் அரசு கொறடா தாமரை.ராஜேந்திரன் அவர் வீட்டு முன்பு கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி தமிழகஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

திமுக தலைமையிலான அரசு தமிழக ஆட்சி பொறுப்பேற்று கடந்த மூன்று மாதங்களாக ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் திமுக அரசு சட்டமன்ற தேர்தலின்போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை எனக்கூறி தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து அரியலூரில் முன்னாள் அரசு கொறடா தாமரை.ராஜேந்திரன் தலைமையில், அவர் வீட்டு முன்பு கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியான நீட்தேர்வு என்னாச்சி என்றும்,

பொதுமக்களுக்கு விடிவு தருவதாக கூறியது என்னாச்சு என்றும், விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் இருப்பதை கண்டுகொள்ளாமல் இருக்கும் ஸ்டாலின் அரசை கண்டிப்பதாககோரி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் மாதந்தோறும் மின்கட்டணத்தை கணக்கிடவேண்டும். மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும்.

குடும்பப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News