சொத்துவரி உயர்வை கைவிடக்கோரி அதிமுக, மதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

நகராட்சி அலுவலகம் முன்பு சொத்துவரி உயர்வை கைவிடக்கோரி அதிமுக, மதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-12 08:17 GMT

அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு சொத்துவரி உயர்வை கைவிடக்கோரி அதிமுக, மதிமுக கவுன்சிலர்கள் ஏழுபேரும் கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.


அரியலூர் நகராட்சியின் அவசரக்கூட்டம் நகராட்சியின் தலைவி சாந்தி கலைவாணன் தலைமையில், நகராட்சி ஆணையர் சித்ராசோனியா முன்னிலையில் நடைபெற்றது.

திமுக கவுன்சிலர்கள் 2வது வார்டு செல்வராணி, 3வது வார்டு சத்யன், 6வது வார்டு ரேவதி, 14வது வார்டு ஜெயந்தி, 15வது வார்டு ராணி, 16வது வார்டு ராஜேஸ், திமுக ஆதரவு கவுன்சிலர்கள் 4வது வார்டு கண்ணன், 1வது வார்டு ஜேசுமேரி, 7வது வார்டு கலியமூர்த்தி, 18வது வார்டு புகழேந்தி, அதிமுக கவுன்சிலர்கள் 8-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கே.ராஜேந்திரன், 9-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கே.மகாலெட்சுமி, 10-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் எம்.இன்பவள்ளி , 11வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் எஸ். முகமது இஸ்மாயில், 13-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர்ஓ. வெங்கடாசலபதி, 17-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் செ. ஜீவா, மதிமுக கவுன்சிலர் 14வது வார்டு உறுப்பினர் மலர்கொடிமனோகரன் ஆகிய 17 கவுன்சிலர்கள் கூட்ட மன்றத்திற்கு வருகை தந்தனர்.

இதனையடுத்து அவசர கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பொருள்எண் 19ல் சொத்துவரி உயர்வு மற்றும் காலிமனைவரி சீராய்வு ஆகியவற்றிற்கு அதிமுக கவுன்சிலர்கள் ராஜேந்திரன், மகாலெட்சுமி, இன்பவள்ளி, முகமது இஸ்மாயில், வெங்கடாசலபதி, ஜீவா, ஆகிய 6பேரும் மதிமுக கவுன்சிலர் மலர்கொடியும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டமன்றத்தைவிட்டு வெளியேறினர்.

பின்னர் நகராட்சி அலுவலகம் முன்பு சொத்துவரி உயர்வு மற்றும் காலைமனைவரி சிராய்வு ஆகியவற்றை கைவிடக்கோரி ஏழு பேரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் நகர்மன்ற கூட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News