அரியலூரில் அதிமுக வேட்பாளர் 20 கிராமங்களில் வீதி, வீதியாக பிரசாரம்

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான தலைமை அரசு கொறடா ராஜேந்திரன் இன்று 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சூறாவளி சுற்றுப் பிரச்சாரம் மேற்கொண்டு வீதி, வீதியாக வாக்கு சேகரித்தார்.

Update: 2021-03-16 07:20 GMT

அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக தலைமை அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் போட்டியிடுகின்றார். இன்று காலை வாரணவாசி கிராமத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். சமத்துவபுரம், மல்லூர், பார்ப்பனச்சேரி, மறவனூர், திடீர் குப்பம், காந்திநகர், கீழப்பலூர், கீழையூர், மேலப்பழுவூர், வேப்பங்குடி, கோக்குடி, பூண்டி, மலத்தான்குளம், அயன் சுத்தமல்லி, எ.க்குடி, வேட்டக்குடி, காங்கியனூர், புறத்தாக்குடி, வெங்கனூர், கரைவெட்டி பரதூர் ஆகிய 20 கிராமங்களில் தனக்காக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அனைத்து கிராமங்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரியலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் அரசு கொறடாவாக பணியாற்றிய காலத்தில் தொகுதிக்கு செய்த பல கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள், கட்டுமானப்பணிகள், பொது மக்களுக்கு வழங்கிய உதவிகள் ஆகியவற்றைக் கூறி வாக்கு சேகரித்தார். மேலும் தன்னை தேர்வு செய்தால் மக்களின் அடிப்படைத் தேவைகளை விரைந்து முடிப்பேன். எளிதில் என்னை சந்திக்கலாம். நீங்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண உங்களுக்கு உதவுவேன் என்ற வாக்குறுதிகளையும் அளித்தார். அவருடன் பாமக பாஜக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News