அரியலூரில் வேளாண்மை உழவர் நலத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் வேளாண்மை உழவர் நலத்துறை வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் ஆய்வு.

Update: 2021-12-24 08:03 GMT

அரியலூர் மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் ஆய்வு.

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியநாகலூர் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், பெரியநாகலூர் ஊராட்சியில் வேளாண்மைத்துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் பயன்பெற்ற அன்பழகன் என்பவரின் விவசாய வயலில் நிரந்தர மண்புழு உரம் தயாரிப்பிற்காக செய்யப்பட்டிருந்த தொட்டியினை பார்வையிட்டு, மண்புழு உரம் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் பெறுவது குறித்தும், அதன் மூலம் விவசாய நிலங்களுக்கு தேவையான உரம் எவ்வளவு கிடைப்பது என்பது குறித்தும், குடில் கறவை மாடுகள் கொண்டு பால் உற்பத்தி அளவு குறித்தும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கேட்டறிந்தார்.

அத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக வழங்கப்பட்ட ஆடுகள் மற்றும் நாட்டுகோழிகள் குறித்து கேட்டறிந்து, தற்போது அதன் மூலம் கிடைக்கப்பெற்ற ஆடுகுட்டி மற்றும் கோழிக்குஞ்சுகள் குறித்தும், அதனை பராமரிப்பது குறித்தும், அதில் உள்ள சிரமங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், ஆடு, மாடு, கோழி ஆகியவற்றிற்கு தேவையான பசுந்தீவனபுல் வயல் ஆகியவற்றினை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, இத்திட்டத்தின் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அட்மா திட்டதின் மூலம் சில்பாலின் முறையில் மண்புழு உரம் தயாரிப்பு செயல்விளக்கதிடலினை பார்வையிட்ட மாவட்ட மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, மாடிதோட்டம் காய்கறி விதைகள் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் தார்பாய் ஆகியவைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் இரா.பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சு.சண்முகம் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News