"விபத்தில்லா சாலை பயணம்" : போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு

"விபத்தில்லா சாலை பயணம்" என்ற தலைப்பில் 5 கிராமங்களில் போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு.

Update: 2022-07-26 12:20 GMT

போக்குவரத்து காவல்துறையினர் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் A. சரவண சுந்தர் உத்தரவின் படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா அறிவுறுத்தலின்படி, அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் (பொறுப்பு) அறிவுரையின்படி, அரியலூரில் இருந்து திருமானூர் செல்லும் சாலையில் உள்ள ஐந்து கிராமங்களான வாரணவாசி, சமத்துவபுரம், காந்தி நகர், திடீர் குப்பம், மற்றும் கீழப்பழுவூர் ஆகிய இடங்களில் அந்தந்த கிராமங்களில் "விபத்தில்லா சாலை பயணம்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் தலைக்கவசத்தின் முக்கியத்துவம், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்தினால் குடும்பத்தினர் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் எடுத்துரைக்கப்பட்டது.

அரியலூர் போக்குவரத்து காவல் துறையின் சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags:    

Similar News