அரியலூர் பால் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: 3 பேர் பணியிடை நீக்கம்

அரியலூர் பால் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு கண்டறியப்பட்டு, சங்கச் செயலாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2022-03-10 11:44 GMT

பைல் படம்.

அரியலூர் பால் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு கண்டறியப்பட்டதையடுத்து, சங்கச் செயலாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அரியலூரிலுள்ள பால் கூட்டுறவு சங்கம், சுமார் 100 மையங்களிலிருந்து தினசரி 20,000 லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. அதில் 13,000 லிட்டர் ஒன்றியத்துக்கும், மீதமுள்ள பால் சில்லரைக்கும் (பால்கார்டு) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. லாபகரமாக செயல்பட்டு வரும் இந்த பால் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பால்வளத்துறை அமைச்சர் மற்றும் பால் வளத்துறை இயக்குநர், கூட்டுறவு சங்க இணைப் பதவிவாளருக்கு புகார்கள் சென்றுள்ளன.

அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், சட்ட விதிமுறைகளுக்கு மாறாக எல்லைத்தாண்டி பால் கொள்முதல் செய்தது, பால் விற்பனையில் வசூலான தொகையை வங்கியில் முறையாக செலுத்தாதது, பால் உற்பத்தியாளர்களுக்கு முறையாக ஊக்கத் தொகையை வழங்காமல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பால்வளத்துறை சட்ட விதிமுறைக்கு புறம்பாக செயல்பட்டதாக சங்கச் செயலாளர் இளங்கோவன், கணக்காளர் ஆனந்த், உதவியாளர் சேகர் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க பதிவாளர் பார்த்திபன் உத்தரவிட்டார். அரியலூர் பால் கூட்டறவு சங்கச் செயலாளராக செந்துறை பால் கூட்டுறவு சங்கச் செயலாளர் கொளஞ்சிநாதன் தற்காலிகமாக பொறுப்பு வகிப்பார் என கூட்டுறவு சங்க பதிவாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News