அரியலூர் மாவட்டத்தில் 72 வயதில் ஊராட்சி மன்றத்தலைவரான மூதாட்டி

அரியலூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவராக 72வயதான மூதாட்டி 808 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Update: 2022-07-12 09:06 GMT

ரெட்டிப்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவராக 72வயதான மூதாட்டி பாப்பாத்தி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் குனசேகரன் வழங்கினார்.


அரியலூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவராக 72வயதான மூதாட்டி பாப்பாத்தி 808 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவராக பதவி வகித்த கணேசன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி உயிரிழந்ததால் மறுதேர்தல் நடத்தப்பட்டது.

இத்தேர்தலில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவராக இருந்த ம.தி.மு.க. பிரமுகர் ராமநாதனின் மனைவி ராணி என்பவருக்கும், தற்போதைய தலைவராக இருந்து உயிரிழந்த ராஜேஸ்வரியின் மாமியாரும், கணேசனின் தாயாருமான 72 வயதான மூதாட்டி பாப்பாத்திசுப்ரமணியனும் களம் கண்டனர். பாப்பாத்தி பூட்டுசாவி சின்னத்திலும், ராணி ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டார்.

முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர், தற்போதைய ஊராட்சி மன்றத்தலைவர் தேர்தல் ஆகியோருக்கான போட்டியாக மாறி, விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.

வாக்குகள் பதிவு செய்யப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. ஆறு பூத்களில் நடைபெற்ற வாக்குப்பதிவின் பெட்டிகள் வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில் ஆறு எண்ணிக்கையிலும் பாப்பாத்தி தொடர்ந்து முன்னிலை வகித்தார்.

பூத் எண் 108ல் பாப்பாத்தி 250 வாக்குகளும், ராணி 226 வாக்குகளும் பெற்றார்.பூத் எண் 109ல் பாப்பாத்தி 316 வாக்குகளும், ராணி 212 வாக்குகளும் பெற்றார்.பூத் எண் 110ல் பாப்பாத்தி 127 வாக்குகளும், ராணி 114 வாக்குகளும் பெற்றார்.பூத் எண் 111ல் பாப்பாத்தி 232 வாக்குகளும், ராணி 45 வாக்குகளும் பெற்றார்.பூத் எண் 112ல் பாப்பாத்தி 422 வாக்குகளும், ராணி 158 வாக்குகளும் பெற்றார்.பூத் எண் 113ல் பாப்பாத்தி 288 வாக்குகளும், ராணி 72 வாக்குகளும் பெற்றார்.

முடிவில் 808 வாக்குகள் வித்தியாசத்தில் பாப்பாத்தி ஊராட்சி மன்றத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் குனசேகரன் அவரிடம் வழங்கினார்.

Tags:    

Similar News