75வது சுதந்திர தினம்: ரயில் நிலையம் பேருந்து நிலையங்களில் தீவிர சோதனை

அரியலூர் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-08-14 12:47 GMT

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ்கான்அப்துல்லா உத்தரவின் பேரில் துப்பறியும் நாய்களுடனும், மெட்டல் டிடெக்டர் கருவிகளைக் கொண்டு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 900 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்ட எல்லைகள், ரயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதிகள், பஸ் நிலையங்கள்,  வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகளில் (லாட்ஜ்) உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அரியலூர் நகர காவல் ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான காவல்துறையினர் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட எல்லைகள் மற்றும் முக்கிய பிரதான சாலைகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News