75வது சுதந்திரதினவிழாவில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு சான்று

அரியலூர் : 75வது சுதந்திரதினவிழாவையொட்டி அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தேசியகொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார்.

Update: 2022-08-15 05:27 GMT

75வது சுதந்திரதினவிழாவையொட்டி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தேசியகொடியை ஏற்றிவைத்து, சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு சான்று வழங்கி கௌரவித்தார்.


இந்தியாவின் 75வது சுதந்திர தினவிழா அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தேசியகொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி மற்றும் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு, காவலர்கள் மரியாதையை ஏற்றுக்கொண்டனர். உலகில் சமாதானம் நிலவவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி மற்றும் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் வெண்புறாக்களை பறக்கவிட்டனர்.


காவல்துறையை சார்ந்த 30 பேர் மற்றும் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சார்ந்த 258 அலுவலர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு சான்று வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதனையடுத்து 90 பயணாளிகளுக்கு 72லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வழங்கினார்.

மேலும் ஜெயங்கொண்டத்தில் இருந்து லடாக் சென்று மீண்டும் ஊர் திரும்பிய இளைஞர்களையும், விளையாட்டில் இந்திய தமிழக அளவில் பல பரிசுகளை பெற்ற வீரர்களையும் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பாராட்டி சான்றுகள் வழங்கினர்.

இதன் பின்னர் தேசப்பற்றை பறைசாற்றும் விதமாக பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறந்து விளங்கிய கலை நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பாராட்டு சான்று வழங்கினார்.

Similar News