அரியலூர் மாவட்டத்தில் 72 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள்

அரியலூர் மாவட்டத்தில் 72 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை கால்கள் செய்வதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டது.

Update: 2021-10-07 04:35 GMT

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் (கால்கள் மட்டும்) வழங்கிட தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கான அளவீடு முகாம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்முகாமில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள கால்கள் துண்டிக்கப்பட்ட (விபத்து மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் கால்களை இழந்த) மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் (கால்கள் மட்டும்) வழங்கிடும் பொருட்டு  அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றது.

இப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்  மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் இதுபோன்ற சிறப்பு முகாம்கள் மூலமாக அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்திக்கொள்றுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

முகாமில் கலந்துகொண்ட 72 மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு தேவையான செயற்கை கால்கள் செய்வதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அண்மையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்ட முகாமில் விபத்தின் மூலம் கையினை இழந்த மணக்கால் கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி என்ற சிறுவன் தனக்கு உதவி வேண்டி மனு அளித்ததைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற முகாமில் இச்சிறுவனுக்காக மட்டும் செயற்கை கை பொருத்துவதற்காக மாவட்டகலெக்டர் ரமண சரஸ்வதி அறிவுரையின்படி, அளவீடு செய்து, செயற்கை கை பொறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இம்முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News