அரியலூர் மாவட்டத்தில் 43,390 நபர்களுக்கு 6-ம்கட்ட கொரோனா தடுப்பூசி

அரியலூர் மாவட்டத்தில் இன்று 43,390 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-10-23 15:25 GMT

அரியலூர் மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தவிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி செலுத்தப்படும் விகிதத்தை விரைவுப்படுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

முதல் தடுப்பூசி முகாம்களில் 47,125 நபர்களுக்கும், இரண்டாம் தடுப்பூசி முகாம்களில் 17,944 நபர்களுக்கும், மூன்றாம் தடுப்பூசி முகாம்களில் 50,941 நபர்களுக்கும், 4ம் தடுப்பூசி முகாம்களில் 32,311 நபர்களுக்கும், என மொத்தம் 1,48,321 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசி செலுத்துப்பட்டது.

6வது மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று 418 இடங்களில் நடத்தப்பட்டது. 43,390 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துப்பட்டது. முதற்கட்ட கொரோனா தடுப்பூசி 16,015நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தடுப்பூசி 27,375 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இது நாள் வரை மொத்தம் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி 4,55,612 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது 86 சதவீத நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி 1,63,083: நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது 27 சதவீத நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News