அரியலூர்: காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 46 வாகனங்கள் பொது ஏலம்

அரியலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் கைப்பற்றப்பட்ட 46 வாகனங்கள் எஸ்.பி. தலைமையில் ஏலம் விடப்பட்டது.

Update: 2021-10-21 12:20 GMT

அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 46 வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில்  பொது ஏலம் விடப்பட்டது.


அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 46 வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் 9,37,216/- ரூபாய்க்கு பொது ஏலம் விடப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் அரியலூர் மாவட்ட காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மது பாட்டில்களை விற்க பயன்படுத்திய 46 இருசக்கர வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு அரசுக்கு ஆதாயம் தேடும் நோக்கத்தில் ஏலம் விடப்பட்டது .


அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில், திருச்சிராப்பள்ளி மோட்டார் வாகன பராமரிப்பு துறை மண்டல துணை இயக்குனர் M.எஸ்தர் வதனா, அரியலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்(மதுவிலக்கு அமல் பிரிவு) திருமேனி, பெரம்பலூர் கலால் உதவி ஆணையர் ஷோபா, அரியலூர் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன், அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகர், அரியலூர் கோட்ட கலால் அலுவலர் சந்திரசேகரன், ஆகியோர் முன்னிலையில் ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 46 வாகனங்களும் ஏலம் விடப்பட்டது .

134 டோக்கன்கள் வழங்கப்பட்டு பொது ஏலம் தொடங்கப்பட்டது. இதில் 46 வாகனங்களுக்கு அரசு நிர்ணயித்த 3,28,000/-/- ரூபாய்க்கு மேலாக 9,37,216/- ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு அரசு ஆதாயம் ஆக்கப்பட்டது.

காவல்துறை சார்பில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News