அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Update: 2022-02-14 12:08 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்-2022, 19.02.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரியலூர் (6301) (6304) (6306) (6401) (6405) (6406) (6418) (6488) (6403), பரணம் (6440), கல்லாத்தூர் (6456) (6310), வரதராஜன்பேட்டை (6316), உடையார்பாளையம் (6315) (6475) மற்றும் தளவாய் (6445) ஆகிய 16 தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு 17.02.2022 காலை 10.00 மணி முதல் 19.02.2022 நடுஇரவு 12.00 மணி முடியவும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22.02.2022 அன்று அரியலூர் (6301) (6304) (6306) (6401) (6405) (6406) (6418) (6488) (6403) மற்றும் கல்லாத்தூர் (6310) (6456) ஆகிய 11 அரசு சில்லறை மதுபான கடைகள் மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுக்கூடம் ஆகியவற்றிற்கு 22.02.2022 அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News