அரியலூர் மாவட்டத்தில் 300 இடங்களில் 5-ம்கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்

அரியலூர் மாவட்டத்தில் 5-வது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று 300 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2021-10-10 12:57 GMT

அரியலூர் மாவட்டத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தவிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை ஒழிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாமம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி செலுத்தப்படும் விகிதத்தை விரைவுப்படுத்தும் வகையில்  மாபெரும் முகாம்கள் நடத்தப்பட்டது.

முதல் தடுப்பூசி முகாம்களில் 47,125 நபர்களுக்கும், இரண்டாம் தடுப்பூசி முகாம்களில் 17,944 நபர்களுக்கும், மூன்றாம் தடுப்பூசி முகாம்களில் 50,941 நபர்களுக்கும், 4ம் தடுப்பூசி முகாம்களில் 32,311 நபர்களுக்கும், என மொத்தம் 1,48,321 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசி செலுத்துப்பட்டுள்ளது.

அரியலூர் சுகாதாரப்பகுதி மாவட்டத்தில் இது நாள் வரை மொத்தம் கொரோனா தடுப்பூசி 399258 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 108355 நபர்கள் இரண்டு தவணைகளும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தம் 507613 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. இது நாள் வரை மாற்றுதிறனாளிகள் 3182 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 20,357 நபர்களுக்கும் இரண்டாம் தவணை தடுப்பூசி 5209 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

5வது மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று 300 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் பின் தங்கி உள்ள அரியலூர் வட்டாரத்தில் 20 இடங்களிலும், திருமானூர் வட்டாரத்தில் 28 இடங்களிலும், தா.பழூர் வட்டாரத்தில் 03 இடங்களிலும், கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

மாவட்ட அளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள், வருவாய்துறையினர், தன்னார்வலர்கள், தனியார் கல்லூரி பயிலும் மாணவர்களை கொண்டு தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஆட்டோ அறிவிப்பு, டம் டம் மூலம் தடுப்பூசி நடைபெறும் இடம் அதன் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அரியலூர் சுகாதாரப்பகுதி மாவட்டம் முழுவதிலும் மாற்று திறனாளிகள் மற்றும் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு 20 சிறப்பு நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைத்து அனைத்து கிராமங்களுக்கும் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதை மேலும் தீவிர படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News