அரியலூர் மாவட்டத்தில் புகையிலை பொருள், மது பாட்டில் விற்ற மூவர் கைது

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீசார் புகையிலை விற்ற 2 பேர், மது விற்ற ஒருவரை கைது செய்தனர்.

Update: 2022-04-25 13:46 GMT

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் எஸ்.எஸ்.ஐ. அறிவழகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லங்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்லமுத்து மகன் செல்லகண்ணு(32),தேளூர் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராணி (40) ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அவர்களது பெட்டிக்கடைகளில் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அரியலூர் சடைய படையாச்சி தெருவைச் சேர்ந்த பிச்சைப்பிள்ளை மகன் கோவிந்தசாமி(43)என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபம் பின்புறம் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதலாக விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து கயர்லாபாத் எஸ்.எஸ்.ஐ. அறிவழகன் வழக்கு பதிந்து கோவிந்தசாமியை கைது செய்து அவரிடம் இருந்த குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

Tags:    

Similar News