அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 135 வீடுகள் சேதம்: ஆட்சியர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொ்டர்மழையால் 135 வீடுகள் சேதம் 5 ஆடுகள் உயிரிழப்பு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி.

Update: 2021-11-12 05:49 GMT

அரியலூர் மாவட்டத்தில் தாெடர் மழையால் வீடுகள் இடிந்து விழுந்து சேதம்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக அரியலூர் பகுதியில் 20 குடிசை வீடுகள், ஜெயங்கொண்டம் பகுதிகளில் 54 குடிசை வீடுகளும், செந்துறை பகுதியில் 15 குடிசை வீடுகளும், ஆண்டிமடம் பகுதியில் 13 குடிசை வீடுகளும் என 102 குடிசை வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. ஜெயங்கொண்டம் பகுதியில் 4 குடிசை வீடு முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

அரியலூர் பகுதியில் 4 வீடுகள், ஜெயங்கொண்டம் பகுதிகளில் 19 வீடுகளும்,செந்துறை பகுதியில் 4 வீடுகளும், ஆண்டிமடம் பகுதியில் 2 வீடுகளும் என 29 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. அரியலூர் மாவட்டத்தில் 135 வீடுகள், குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.

கல்லூத்தூரைச் சேர்ந்த சின்னம்மாள் மற்றும் ராசமாணிக்கம் ஆகியோரின் வீட்டின் மண் சுவர் புதன்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் 5 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

Tags:    

Similar News