காவல்நிலையங்களில் 156 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

Update: 2021-03-09 07:00 GMT

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி ( கோப்புபடம்)

அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் 2021 ஐ முன்னிட்டு உரிமம் பெற்ற 156 நபர்கள் தங்களது துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பின்னர் உரிமம் பெற்றுள்ள துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தேர்தல் செயல்முறை முடியும் வரை துப்பாக்கிகளை அவரது எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்பது தேர்தல் நடைமுறை ஆகும். இதனையடுத்து அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரத்னா, உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அரியலூர் மாவட்ட எஸ்பி, பாஸ்கரன் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இதனால் துப்பாக்கி உரிமம் பெற்ற 156 நபர்கள் தங்களது துப்பாக்கிகளை காவல்நிலையங்களில் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் தனிநபர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்போர் எண்ணிக்கை மொத்தம் 195. இதில் 156 நபர்கள் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ள 39 ( விதி விலக்குப் பட்டியலில் உள்ளவை) வங்கிப்பணிகளில் பணியாற்றும் முன்னாள் இராணுவவீரர்களுக்கு துப்பாக்கிகள் அளிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனிநபர் துப்பாக்கி பயன்பாடு 100 சதவீதம் ஒப்படைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News